சவுதியை 'விஞ்ஞான' ரீதியாக முன்னேற்ற நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 25 March 2018

சவுதியை 'விஞ்ஞான' ரீதியாக முன்னேற்ற நடவடிக்கை


சவுதி அரேபியாவை விஞ்ஞான ரீதியாக முன்னேற்றும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் தற்போது அமெரிக்கா சென்றுள்ள சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிநுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதோடு பல ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளதாக சவுதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


சவுதி அரேபியாவுக்கு மூன்ற வார விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள முஹம்மத் பின் சல்மான் அங்கு வைத்தே பெண்கள் அபாயா அணிவது தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment