நேற்று நள்ளிரவு முதல் வைபர் பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் பாவனையில் இருக்கும் தடைகளும் நீக்கப்படும் என அறிவித்துள்ளார் ஒஸ்டின் பெர்னான்டோ.
இதேவேளை முகப்புத்தக பாவனை தொடர்பிலிருக்கும் தடைகள் தொடர்பில் நாளைய தினம் குறித்த நிறுவனத்துடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மாற்றுவழியில் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment