மடவளை சிரிமல் வத்தை ரோட், இல.15 (தொங்கக்கடை) என்ற இடத்தில் வசித்தவரும் தற்போது கெலிஓயா கல்கமுவயில் வசிப்பவருமான மொகமட் ஐயால் (80 வயது) காலமானார். (இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜிஊன்).
இவர்; மடவளையைச் சேர்ந்தவர்களான சித்தி முனவ்வராவின் கணவரும், மொகமட் சிப்லி (கிரசன்ஸ் பூட்ஸ், மற்றும் ஹைரா பார்ம்), அஷ்ஷேக் அனஸ் மொகமட் (நளீமி), பாத்திமா பைரோசா ஆசிரியை (பானகமுவ மு.வி.) ஆகியோரின் தந்தையும், ஊடக வியலாளர் ஜே.எம்.ஹாபீஸ் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), அதிபர் பவுசுர் றஹ்மான், பொலீஸ் உத்தியோகத்தர் மடவளை கலீல், மின்னத்துல் பவுசியா, ஆசிரியை ஜே.என்.மசீதா (மடவளை மதீனா மத்திய கல்லூரி) ஆகியோரின் மைத்துனருமாவார்.
ஜனாசா இன்று (15.3.2018) கெலிஓயா, கல்கமுவ முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
-ஜே.எம்.ஹாபீஸ்
No comments:
Post a Comment