ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பின் போது இலத்திரனியல் வாக்களிப்பு முறை பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திர கோளாறு சர்ச்சை உருவாகாது தவிர்க்கும் நோக்கிலேயே கட்சித் தலைவர்கள் மத்தியில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஆதரவு கிடைக்கும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment