வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கிரனேட் ஒன்று மற்றும் 2 லீற்றர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மது பானத்துடன் வறகாபொல பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சட்ட விரோத மதுபானம் தொடர்பில் தேடலுக்கு சென்ற வேளையிலேயே குறித்த நபர் கைக்குண்டுடன் கேகாலை பொலிசாரிடம் அகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment