இலங்கையில் சிறுபான்மையின மக்களின் மற்றும் வணக்க வழிபாட்டுத்தளங்களை பாதுகாப்பது அரசின் கடமையென வலியுறுத்தியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய கரிசணைகள் தொடர்பில் அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இருப்பினும் கூட, பாதுகாப்பு படையினரே முன்னின்று சிறுபான்மையின மக்களுக்கு அநீதியிழைக்கும் நிலை தொடர்வதை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் ஆரம்பித்து கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்குப் பரவிய இனவன்முறையின் போது பாதுகாப்பு படையினர் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அதேவேளை லண்டன், ஜெனிவா உட்பட பல ஐரோப்பிய நகரங்களில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment