
மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்களைத் தூண்டி விட்ட அமித் வீரசிங்கவைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
அமித்துடன் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இன வன்முறையின் பின்னணியில் 70க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணம் எங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தொடர்ந்தும் அச்ச சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment