16 உறுப்பினர்களைக் கொண்ட மஸ்கெலிய பிரதேச சபையின் நிர்வாகப் பொறுப்புக்கான தெரிவில் ஏற்பட்ட அமளி கட்சி அலுவலகம் மீதான தாக்குதல் வரை சென்றுள்ளது.
மஸ்கெலிய பிரதேச சபையின் பிரததிதலைவர் பதவிக்கான தெரிவின் போது ஏற்பட்ட முறுகலின் பின்னணியிலேயே தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியதோடு அமளியின் பின்னணியில் கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment