நேற்றிரவு கொழும்பு, மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் பிரதேசத்தைச் சேர்ந்த நிப்பு என அழைக்கப்படும் சாஹுல் ஹமீட் நிப்ராஸ் என பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நேற்றிரவு 8.30 அளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை உயிரிழந்த நபர் 31 வயது நிப்ராஸ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டாட்சியில் பாதாள உலக நடவடிக்கைகள், தினசரி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment