பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு புதிய கட்டிடம் - sonakar.com

Post Top Ad

Thursday, 15 March 2018

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு புதிய கட்டிடம்



பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்காக கொடைவள்ளல் எம்ஜேபுவாத் கட்டிக் கொடுத்தமூன்று மாடிக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 8.30 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக  திறந்து வைக்கப்படவுள்ளது.

எம்ஜே.எம்புவாத் தம்பதியினர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கும் இத்திறப்பு விழாவில்பிரதம பேச்சாளராக ஷம் ஷம் பௌண்டேஷன் அதிபர் அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனீபா கலந்துகெள்கிறார்.

அதிதிகளாக களுத்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பிரியானி முதலிகேகொழும்புபல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பஸீலா ஸமீல் அஹ்ஸன்டாக்டர் பீ.எம்மில்ஹான்சட்டத்தரணி டபிள்யூஎம்.எம்ஸியாட் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

விசேட அதிதிகளாக மேலதிக கல்விப்பணிப்பாளர் திருமதி நூருல் ஹினாயாஉதவிக் கல்விப்பணிப்பாளர்களான திருமதி எஸ்எச்விகும்எம்ரி.எம்இல்யாஸ்முன்னாள் பிரதி அதிபர் திருமதிபுவாதா ஹானிம்காத்தான்குடி பௌஸ் மௌலவிபொறியியலாளர் சம்பத் பெரேரா ஆகியோர்கலந்து கொள்கின்றனர்.

எம்ஜேஎம்புவாத்தனது பெற்றோரின் ஞாபகார்த்தமாகவே இம்மண்டபத்தை நிறுவிக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் அதிபர்ஆசிரியர்கள்மாணவர்கள்பெற்றோர்கள்பாடசாலை அபிவிருத்திச் சங்கஉறுப்பினர்கள்பழைய மாணவர்கள்,  ஊர்ப்பிரமுகர்கள்உலமாக்கள் எனப் பலரும் கலந்து  சிறப்பிக்கவுள்ளனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

No comments:

Post a Comment