இலங்கையர் என்ற அடிப்படையில் தேசிய உணர்வுள்ள தமிழ் தலைவர்கள் நாட்டுக்கு அவசியப்படுவதாக தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
இவ்வாறான உணர்வுள்ள அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் இல்லாத வெற்றுச் சூழ்நிலையே காணப்படுவதாகவும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள் நாமல், 2009ல் நடைபெற்று முடிந்தது தமிழர் - சிங்கள மக்களுக்கிடையிலான யுத்தமில்லையெனவும் தெரிவிக்கிறார்.
எனினும், தமிழர்களைத் தோற்கடித்த சிங்கள மன்னராகவே மஹிந்தவை அவரது ஆதரவாளர்கள் மெச்சுவதோடு பௌத்தத்தைக் காப்பதற்காகவென அவரது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இனவன்முறை வளர்க்கப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment