முஸ்லிம்களுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற இன வாத தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
இப் பாதிப்புக்கள் குறிப்பாக கண்டி மாவட்டத்தில் பாரிய அளவில் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர பல உதவிகள் செய்யும் தேவை ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாட்டு மக்களை இவ்விடயத்தில் அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர்.
அத்துடன் எதிர்வரும் ஜுமுஆ தினங்களில் இவர்களுக்கான உதவிகளை (பணமாக) சேகரித்து கீழ்வரும் ஜம்இய்யாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும், அதன் வைப்புச்சீட்டுக்களை 0776185353 என்ற ஜம்இய்யாவின் வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பி அதற்கான பற்றுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறும் பள்ளிவாசல் நிர்வாகிகளை ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.
அல்லாஹுத்தஆலா நம் அனைவரினதும் தான, தருமங்களைப் பொருந்திக் கொள்வானாக.
No comments:
Post a Comment