![](https://i.imgur.com/2PzizxV.png?1)
கண்டியில் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.
தற்சமயம் வரையிலும் சந்தேகமும் அச்சமும் தொடர்கின்ற நிலையில் இன வன்முறையைத் தூண்டியவர்கள் என ஒரு சிலர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இன்று அதிகாலையிலும் சிறு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் வழமை வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையே மத்திய மாகாணம் எங்கும் தொடர்கிறது.
பாரிய சேதங்களை உருவாக்கிவிட்டு ஓயும் இனவாதிகளின் திட்டங்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையிலேயே மீண்டும் இன்றிரவு ஊரடங்கு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment