முகப்புத்தகம் வழியாக இனவாத கருத்துக்களைப் பரப்பி இனவெறியைத் தூண்டிய இராணுவ உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் முகப்புத்தக நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்ட கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிபதி, கைது செய்யப்பட்டவரை அடுத்த மாதம் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி பணித்துள்ளார்.
இராணுவத்தினர், பௌத்த துறவிகள் மற்றும் தனி நபர்கள் இனவாதத்தைத் தூண்டுவதற்கு முகப்புத்தகம் ஊடாக கடுமையாக உழைத்திருந்ததுடன் பல வட்ஸ்அப் குழுமங்கள் ஊடாகவே செய்திப் பரிமாற்றம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment