கண்டி மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் துப்புரவு மற்றும் புனர்நிர்மாண பணிகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
அளுத்கம வன்முறையின் பின்னரும் அவசர அவசரமாக இராணுவத்தினரைக் கொண்டே புனர்நிர்மாணப் பணிகள் நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கண்டியில் ரணில் - மைத்ரி அரசும் அதேவழியைப் பின்பற்றுகின்ற அதேவேளை ஆரம்ப கட்ட இழப்பீட்டுத் தொகையும் வழங்கியிருப்பதாக தெரிவிக்கின்றது.
எனினும், நல்லாட்சி அமைக்கப் போவதாக தெரிவித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும் வன்முறை பரவுவதைத் தடுக்காது அரசு அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment