மாதம்பையில் முஸ்லிம் பெயர் கொண்ட குடிகாரனின் தாக்குதலுக்குள்ளான சோமபால குருப்பு ஆராச்சி எனும் 77 வயது முதியவர் தற்போது நலமடைந்து தமது வழமை வாழ்வுக்குத் திரும்பியுள்ளதாக பிரதேசவாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை நடாத்திய 28 வயது நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்ட மேலும் ஒரு முறுகல் உருவாவது தடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழமை வாழ்வுக்குத் திரும்பியுள்ள முதியவர் அப்பகுதியில் முஸ்லிம்களுடன் சகஜமாகவே பேசிப் பழகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-AJM Niyas
-AJM Niyas
No comments:
Post a Comment