நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளவிருக்கும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியைக் கைவிட்டு கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் டிலான் பெரேரா.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டாட்சி 2020 வரை தொடர்வதற்கு தற்போது தடையாக இருப்பது ரணில் விக்கிரமசிங்கவே என தெரிவிக்கும் அவர், ரணில் கௌரவமாக விலகிக் கொண்டால் அரசு சுமுகமாக இயங்கும் என தெரிவிக்கிறார்.
இதேவேளை, வாக்களிப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் 27 பேர் ஆதரவளிக்கவுள்ளதாக மஹிந்த அணி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment