கடந்த வாரம் அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இன்று ஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து கொழும்பு ஐ.நா அலுவலகம் முன் கவனயீர்ப்பு நிகழ்வும் மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது.
முஸ்லிம் உரிமைக்கான அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு ஜும்மா தொழுகையினையடுத்து பம்பலபிட்டி பள்ளிவாசலிலிருந்து ஆரம்பித்தது. நடைபவனியாகச் சென்று ஐ.நா அலுவலகத்தை அடைந்திருந்த நிலையில் அங்கு கவனயீர்ப்பு இடம்பெற்றதுடன் ஐ.நா கொழும்பு அலுவலக அதிகாரியிடம் அறிக்கையடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்கள் இலக்காக்கப்பட்டு வருவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-அஷ்ரப் ஏ சமத்
-அஷ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment