எந்த வித மக்கள் ஆதரவுமில்லாத, தேசியப்பட்டியல் மூலம் இடம் வழங்கப்பட்ட ஒரு சிலராலேயே ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் சரிவுப் பாதையை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க.
கட்சி மீது பற்றற்ற இவ்வாறான நபர்கள் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் சரிவுப் பாதைக்குச் செல்வதாக கவலை வெளியிட்டுள்ள அவர், இன்று கட்சித் தொண்டர்களை மறந்த நிலையில் ஒரு சில கட்சி உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் தெரிவிததுள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தனது தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி செல்வாக்கைத் தக்க வைத்துக்கொண்டுள்ளதாகவும் பல இடங்களில் தேசியப்பட்டியலில் வந்தவர்களின் புறக்கணிப்பால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment