அனைவரின் மனித உரிமையும் மதிக்கப்படுகிறது: ஐ.நாவில் இலங்கை! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 March 2018

அனைவரின் மனித உரிமையும் மதிக்கப்படுகிறது: ஐ.நாவில் இலங்கை!


இலங்கையில் அனைத்தின மக்களினதும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதாகவும் அங்கு எந்தப் பிரச்சினையுமில்லையெனவும் ஐக்கி நாடுகள் சபையில் பறைசாற்றியுள்ளார் ஐ.நாவுக்கான இலங்கை பிரதிநிதி சரத் வீரசேகர.

இலங்கையின் விவகாரங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தலையிட முனைவது அத்துமீறல் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளதுடன் பல நாடுகளிலில் தஞ்சம் புகுந்திருந்த இலங்கையர்கள் தற்போது திருப்பியனுப்பப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனினும், சிறுபான்மை மக்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லையென நாடு கடந்த தமிழீழம் சார்பில் உரையாற்றக் கிடைத்த நபர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்த அதேவேளை எதிர்வரும் 19ம் திகதி முஸ்லிம் சமூகமும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment