
அம்பாறை சம்பவத்தைத் தொடர்ந்து சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்தும் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்து கேள்விகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் அவ்வாறு ஒரு மாத்திரை இன்னும் மேற்குலக மருத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட வில்லையெனவும் விளக்கமளித்துள்ளார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க.
அம்பாறையில் இனவிரோத நடவடிக்கையொன்றுக்காக புனையப்பட்ட குறித்த பொய்ப் பிரச்சாரம் பல்வேறு மட்டத்தில் அலசப்படுகின்ற அதேவேளை அரச தரப்பில் பல உயர் மட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் அவ்வாறு ஒரு மாத்திரை இல்லையென நிராகரித்துள்ளனர்.
எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக கடும்போக்குவாதிகள் தொடர்ந்தும் பிரச்சாரங்களை மேற்கொள்கின்ற அதேவேளை பெரும்பாலானோர் அவ்வாறே நம்புவதோடு முஸ்லிம் உணவகங்களில் இவ்வாறும் நடக்கக் கூடும் எனவும் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment