30 கள்ளச்சாராய போத்தல்களுடன் குவைத், சல்மியா பகுதியில் இரு இலங்கையர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றை பரிசோதித்த சந்தர்ப்பத்திலேயே அங்கு 30 போத்தால்கள் காணப்பட்டதாகவும் அவற்றைத் தாமே தயாரித்து விற்பனை செய்வதை வாகனத்தில் இருந்த இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இருவருக்கு எதிராகவும் அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment