நான் திரும்பவும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவேன்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Saturday 24 March 2018

நான் திரும்பவும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவேன்: மஹிந்த



திரும்பவும் தான் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது உறுதியென தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

கடந்த ஆட்சியின் போது இந்தியாவுடன் நல்லுறவு இருக்கவில்லையென்பதையும் ஏற்றுக்கொண்டுள்ள அவர், இனிமேல் நிலைமை மாறும் எனவும் இந்தியா தம்மை வேறு கோணத்திலேயே எதிர்காலத்தில் அணுகும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



இந்திய ஊடகம் ஒன்றுடனான செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ள மஹிந்த, நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பை அறிவித்திருப்பதாகவும் தம்மாலேயே மீண்டும் நாட்டை சீராக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment