சம்மாந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் மீது அம்பாறையில் வைத்து கல் வீச்சு இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தினால் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமுற்றுள்ள போதிலும் பயணிகள் எவருக்கும் பாதிப்பு இல்லையெனவும் சித்தீக் ட்ரவல்ஸ் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை, உஹன பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment