அம்பாறையில் ஆரம்பித்து கண்டி மாவட்டத்தில் விஸ்வரூபமெடுத்த இனவன்முறைகளின் போது ஸ்ரீலங்கா பொலிசார் அசமந்தப் போக்குடன் இருந்தது மாத்திரமன்றி காடையர்கள் தாக்குதல் நடாத்த கால அவகாசமும் வழங்கியிருந்ததாக அமைச்சர் ஹலீம் பிரதமரிடம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்ட-ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேற்றதும் இடம்பெற்ற இவ்வன்முறைகளை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாத பிரதமர் அதன் பின் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாக்குதல் நடந்த இடங்களைப் பார்வையிட்டு வந்தார்.
இந்நிலையில், கண்டி வன்முறைகளின் போது தமக்கு மேலதிக பொலிஸ் படை தேவைப்படுவதாக மாவட்டத்தின் டி.ஐ.ஜி விக்ரமசிங்க கோரியதாகவும் அதற்கு பொலிஸ் மா அதிர் பூஜித ஒத்துழைக்க மறுத்ததாகவும் இவர்களிருவருக்கிடையில் இடம்பெற்ற முறுகலே வன்முறைக்கு விக்ரமசிங்க ஒத்துழைக்க வழி வகுத்ததாகவும் ஸ்ரீலங்கா பொலிஸ் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவிக்கிறார்.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு இருவரும் போட்டியிட்டிருந்த நிலையில் பூஜித அப்பதவியைப் பெற்றுக்கொண்டிருந்தார். கண்டி வன்முறையின் போது விக்ரமசிங்க சட்ட ஒழுங்கு மேலும் நிலைகுலையும் வகையில் நடந்து கொண்டமையே வன்முறை வளர்ந்து செல்வதற்குக் காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment