கண்டி, திகன பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்டு அரங்கேற்றபட்ட இனவன்முறையின் பின்னணியில் நேற்றிரவு குண்டசாலை பிரதேச சபை உறுப்பினராக நியமனம் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்றிரவு அரலிய சமந்த என அறியப்படும் குமார சமந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த அணியே இருப்பதாக சர்வதேச ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை பாதுகாப்புப் படையினரும் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment