வன்முறை காலத்தின் போது அமெரிக்க நிறுவனங்கள் இரண்டின் ஆலோசனையின் பின்னணியிலேயே பேஸ்புக் பாவனை தடை செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதோ, மக்கள் உரிமைகளைக் குறைப்பதோ தனது நோக்கமில்லையெனினும், உள்நாட்டிலும் பல மட்டங்களிலும் பேஸ்புக் பாவனையை நிரந்தரமாகத் தடை செய்யும்படியும் ஆலோசனை வழங்கப்பட்டதாக மைத்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் தான் எடுத்த முக்கிய தீர்வுகள் பற்றி விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றமை தொடர்பில் தான் அலட்டிக்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment