கண்டியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை எதிர்த்து கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் சிங்ஹல ராவய கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளது.
சிங்ஹல ராவய அமைப்புட்பட கடும்போக்குவாதிகள் பத்துப் பேர் இன்றைய தினம் நேரடியாகச் சென்று கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையில் முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் இனவிரோத தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பப்பட்டுள்ளதுடன் பல ஐரோப்பிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment