
இம்முறை மட்டக்களப்புக்கு வந்தும் பௌத்த விகாரைப் பக்கம் வராது போனால் மைத்ரிபால சிறிசேனவை எரியூட்டப் போவதாக மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேரில் சந்தித்து கௌரவப்படுத்தியதன் மூலம் உயிராபத்து நீங்கியுள்ளது.
நீண்டகாலமாக மட்டக்களப்பில் சிங்கள மக்களுக்காகப் போராடும் தனி நபராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சுமனரத்ன பகிரங்கமான இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு சட்டத்தையில் கையிலெடுத்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருபவராவார்.
எனினும், நேற்று முன்தினம் கருப்புக் கொடி போராட்டம் நடாத்திய சுமனரத்னவை மைத்ரிபால சிறிசேன சந்தித்து மூலம் நிலைமை சுமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment