அண்மையில் கொழும்பு, புதுக்கடை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித தலைக்குரிய உடல் அங்குனகொலபெலஸ்ஸ, கோத்தபாயகமயிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதானவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிசார் வயல்வெளியொன்றிலிருந்து உடலைத் தோண்டியெடுத்துள்ளனர்.
புதுக்கடையில் பெப்ரவரி 16ம் திகதி வர்த்தகர் ஒருவர் கொலையானததைத் தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment