தொற்றா நோய் சம்பந்தமான முதலாவது சார்க் நாடுகளின் மாநாடு சுகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் எதிர்வரும் 31ம் திகதி மற்றும் ஏப்ரல் 1ம் திகதி கொழும்பு கோல்ட் பேஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாட்டில் தொற்றா நோய் இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள், கொள்கைகள் நடைமுறைப்படுத்தல், சார்க் நாடுகளின் அனுபவ கலந்துரையாடல்கள் என்பன இடம்பெறவுள்ளன.
மரபணு , உடல் அமைப்பு மற்றும் சூழல் பழக்கம் போன்ற காரணங்களினால் உருவாகும் தொற்றா நோய்களை இல்லாதொழிப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிலும் பல வேளைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. காச நோய், புற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீராக நோய் போன்ற பிரதான தொற்றா நோய்களுக்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டு அவற்றிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான பல வழிமுறைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படவுள்ளன.
உலகளாவிய ரீதியில் வருடத்திற்கு 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொற்றா நோயினால் மரணிக்கின்றனர். புகையிலை பாவனை, குறைந்த ஓய்வு, போஷாக்கான உணவு உற்கொள்ளாமை போன்றன தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான பிரதாண காரணங்களாகும்.
தொற்றா நோயானது உலகின் நிலையான அபிவிருத்திற்கு அச்சுருத்தலாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அடையாளப்படுத்தியுள்ளது. எனவே 2030ம் ஆண்டில் தொற்றா நோயினை இல்லாதொழிப்பதினூடாக உலகத்தில் நிலையான அபிவிருத்தியை வெற்றி கொள்வதற்கான பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேளைத்திட்டங்களுக்கு உலக சுகாதார மையம் தமது வாழ்த்தினை தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் செயற்பாடுகளை ஏனைய நாடுகளும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மாரடைப்பு, அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய்களினால் ஏற்படுகின்ற மரண வீத்தினை 2025ம் ஆண்டு ஆகின்ற பொழுது 25%ஆலும் , போதைப் பொருள் பாவனையை 10% லும், புகைத்தல் பாவனையை 30% குறைப்பதற்கும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சில திட்டங்கள் நடைமுறையில் இடம்பெற்று வருவதாகவும் சுகாதாரம் போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
-
No comments:
Post a Comment