நெவில் பெர்னான்டோ வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்று விட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தது பொய்யான தகவல் எனவும் இதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் சைட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
நெவில் பெர்னான்டோ வைத்தியசாலையை விற்பதற்கான பத்திரிகை விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டாட்சி அரசு சைட்டம் நெருக்கடியை சமாளிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இவ்வறிவுப்பும் வெளியிடப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment