ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றுக்கொள்ளுமாக இருந்தால் சவுதி அரேபியாவும் அணு ஆயுத பலத்தைப் பெற்றுக்கொள்ளத் தயங்காது என எச்சரித்துள்ளார் சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான்.
சவுதி அரேபியா ஆயுத பலத்தை நம்பியிருக்கும் நாடில்லை, ஆனாலும் ஈரான் அணு ஆயுத வல்லமையைப் பெறுமாக இருந்தால் சவுதி அரேபியாவும் அணு ஆயுத வல்லமையைப் பெற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஹிட்லரின் இன்னொரு அவதாரம் எனவும் அவர் சித்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment