ஜப்பானில் மைத்ரிபால சிறிசேனவின் கூட்டத்தில் ஞானசார கலந்து கொண்டிருந்தமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் அவர் ஜனாதிபதியுடன் செல்லவில்லையெனவும் முன்னரே அங்கு சென்று விட்டதாகவும் அரசு விளக்கமளித்துள்ளது.
ஜப்பானில் உள்ள தூதரகமே விருந்தினர்களுக்கான அழைப்புகளை அனுப்பியிருப்பதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் நேரடி தலையீடு எதுவும் இல்லையெனவும் விளக்கமளித்துள்ளது.
வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காது ஜப்பான் சென்ற ஞானசார அங்கு மைத்ரியின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அதேவேளை கொழும்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment