ஐ.நா: இலங்கை தொடர்பில் அமெரிக்கா 'அவதானம்'! - sonakar.com

Post Top Ad

Wednesday, 21 March 2018

ஐ.நா: இலங்கை தொடர்பில் அமெரிக்கா 'அவதானம்'!



இலங்கையில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் கவலை கொண்டுள்ளதுடன் அவதானித்து வருவதாக தெரிவிக்கிறது அமெரிக்கா.

ஐக்கிய நாடுகள் சபையில் 37வது மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் வைத்தே அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

கடந்த இரு வருடங்களாக மேற்குலகின் முழு ஆசீர்வாதத்தைப் பெற்று இயங்கி வந்த கூட்டாட்சி தற்போது நிலை தடுமாறியுள்ளதுடன் நாட்டில் சட்ட,ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.


2014 அளுத்தக வன்முறையை விட மோசமான இனவன்முறை முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவால் துரித நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதுடன் பாதுகாப்புப் படையினர் கைகட்டிப் பார்த்திருக்க முஸ்லிம்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்கி எரியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment