கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவன்முறையை நியாயப்படுத்தும் வகையில் தமது முகப்புத்தகத்தில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட கல்முனைப் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை பாரதி வீதி மற்றும் சின்னத்தம்பி வீதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடைய இருவரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது கல்முனை நீதிமன்றம்.
நேற்றைய தினம் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கும் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்கமறியல் வழங்கப்பட்டிருந்தமையும் கடந்த வருடம் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
எனினும், மஹசோன் பலகாய உட்பட இனவாத அமைப்புகள் தொடர்ச்சியாக சுதந்திரமாக இயங்கி வந்ததுடன் திகன பகுதியில் பாரிய இன வன்முறையை உருவாக்கியிருந்த போதும் பாதுகாப்பு படையினர் கைகட்டிப் பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment