பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரபு மொழி கற்கை நிலையம் அரபு மொழியை அடிப்படையிலிருந்து கற்க விரும்புவோருக்கான மூன்று மாத கால ஆரம்ப கற்கை நெறி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
நவீன கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தி அரபு மொழியில் செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு ஆற்றல்களையும் விருத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாடநெறி பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என்றும் இதில் ஆண்கள் மாத்திரம் பங்குகொள்ளலாமென்றும் சிறு கட்டணம் அறவிடப்படுமென்றும் அரபு மொழி கற்கை நிலையத்தின் தலைவர் கலாநிதி பீ.எம்.எம். இர்பான் (நளீமி) தெரிவித்துள்ளார்.
துறைசார் நிபுணர்களால் நடத்தப்படவிருக்கும் இப்பாடநெறிக்கு முதலில் விண்ணப்பிக்கும் 20 பேர் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் விண்ணப்பம் தொடர்பான தகவல்களைப் பெற விரும்புவோர் 0777153517/ 0777877494 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-Jemsith Azeez
No comments:
Post a Comment