பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இலகுவாக தோற்கடிக்கப்படும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இதேவேளை கட்சி நிலைப்பாட்டை மீறி நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் மஹிந்த கையொப்பமிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment