நீதித்துறையை கடுமையாக அவமதித்தவர் மஹிந்த: ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Friday, 23 March 2018

நீதித்துறையை கடுமையாக அவமதித்தவர் மஹிந்த: ரஞ்சன்



நீதித்துறையைத் தாம் அவமதிப்பதாக தெரிவிக்கும் மஹிந்த ராஜபக்சவே அதனைக் கடுமையாக அவமதித்தவர் என தெரிவித்துள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.

நாடாளுமன்றில் நீதித்துறை பற்றி ரஞ்சன் ராமநாயக் முன் வைக்கும் விமர்சனங்கள் அரசின் நிலைப்பாடு எனவும் அதனால் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கிறார்.

எனினும், தனது பேச்சுக்கு உடன்படாத பிரதம நீதியரசரின் பதவியை பறித்ததை விட அவமதிப்பை வேறு யாரும் செய்ய முடியாது எனவும் தான் பேசுவது தனது சொந்தக் கருத்துக்கள் எனவும் ரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.



தொடர்ச்சியாக நீதித்துறையை விமர்சித்து வரும் ரஞ்சன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படுகின்ற அதேவேளை நாடாளுமன்றில் அதற்கான உரிமையிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment