நீரிழிவு நோயாளர்கள் அன்றாடம் உபயோகிக்கும் உபகரணங்கள் சந்தையில் வெவ்வேறு பல கூடிய விலைகளை கொண்டிருப்பதாகவும் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.
முதற்கட்டமாக நீரிழிவு நோயாளர்கள் தமது இரத்தப் பரிசோதனைக்காக பாவிக்கும் Glucose Stripes மற்றும் Glucose Masin போன்றவற்றினது விலைகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், Glucose Stripes 25 இனது விலை சந்தையில் ரூபா 1500 ற்கும் அதிகமாக விற்கப்படுவதாகவும், Glucose Masin ரூபா 2500 லிருந்து கூடிய விலைகளுக்கு விற்கப்படுவதாகவும் இவற்றினது விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
-Nuzly Sulaim
No comments:
Post a Comment