ஆயுர்வேத திணைக்களத்தின் வைத்தியர்களுக்கான கணனிகள் மற்றும் தொழிநுட்ப இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு சுகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் அநுராதபர மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக் கிழமை (18) இடம்பெற்றது.
ஆயுர்வேத மருத்துவ முறையினை பொது மக்களுக்கு அறிவூட்டவும், புதிய தொழினுட்பகளினூடு அவற்றை செயற்படுத்தும் நோக்கோடு ஆயுர்வேத வைத்தியர்களுக்கு கணனிகள் மற்றும் தொழினுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
இந் நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்:
ஆயுர்வேத வைத்திய துறையினை அபிவிருத்தி செய்ய சுகாதார திணைக்களம் மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து செயற்பட நாம் தீர்மானித்துள்ளோம்.
இன்றைய அபிவிருத்தியடைந்துள்ள உலகுக்கு நவீன மயப்படுத்தப்பட்ட உலகுக்கு நவீனமயப் படுத்தப்பட்ட ஆயுர்வேத முறை இன்றியமையாதுள்ளது. தொழினுட்ப முன்னேற்றத்தை தடுக்க எம்மால் முடியாது எனவே தொழினுட்ப துறையின் முன்னேற்றத்தோடு இணைந்து எமது சுதேச மருத்துவ முறையினையும் முன்னேற்ற வேண்டிய கடமை எம் மீதுள்ளது. இதற்கான ஆதரவு முழு உலகத்திலிருந்து எமக்கு கிடைக்கப் பெறுகின்றது. எனவே நாம் இந்த சுதேச மருத்துவம் அதாவது ஆயுர்வேத மருத்துவ முறையினை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
எது எப்படி இனுப்பினும் சில அதிகாரிகள் இவற்றை நடைமுறைப்படுத்த விரும்புவதில்லை. நாட்டை அபிவிருத்தி செய்து மாற்ற வேண்டும் என்ற நோக்கோடே நல்லாட்சி அரசாங்கம் தோன்றியது. இதனை அடைந்து கொள்ளவே நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பல எதிர்ப்புக்கு மத்தியில் ஒன்றிணைந்துள்ளது. கட்சி பேதமின்றி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் அதிவேக பாதையில் பயணிப்பது முதல் கொலை விவகாரம் வரையில் நாட்டின் சட்டம் சரிவர நிலை நாட்டப்பட வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்திம கமஙே, மாவட்ட செயலாளர் கீதாமனி கருணாரத்ன மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
-Nuzly Sulaim
No comments:
Post a Comment