![](https://i.imgur.com/gsqS5vb.png?1)
கண்டியில் இனியும் ஊரடங்கை அமுல்படுத்தும் தேவையில்லையென தெரிவிக்கிறார் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர.
கண்டியை உலுக்கும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து கடந்த வாரம் ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தையும் மீறி இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் நேற்றிரவும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் இனியும் சர்ச்சைகள் வராது எனவும் பொலிசார் தெரிவிக்கின்றமையும் பொலிசார் பார்த்திருக்கவே அனைத்து வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment