ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் உண்மையான இலக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என தெரிவிக்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.
அடுத்த தேர்தலில் எப்படியும் வெல்ல முடியாது என நன்கறிந்து வைத்துள்ள வங்குரோத்து அரசியல்வாதிகள் பின் கதவால் மீண்டும் உள்நுழைய எடுக்கும் முயற்சியாகவே தாம் இதனைக் காண்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தலில் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்போ, அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கோ மக்கள் ஆணை பெறப்படவில்லையெனவும் அதற்கு முன் நிலவிய ஊழல், கொள்ளை மற்றும் குடும்ப ஆட்சியைக் களையவே மக்கள் வாக்களித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், கூட்டாட்சி அவ்வாறான கொலை காரர்களை இன்னும் தண்டிக்காதது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment