பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள மஹிந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டால் கூட்டு எதிர்க்கட்சி வெளியிலிருந்து ஒத்துழைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாம் அரசைக் கவிழ்ப்பதற்கோ ஆட்சியைக் கைப்பற்றவோ முயற்சிக்கவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment