நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விரட்டுவது உறுதியென தெரிவித்துள்ளார் கூட்டு எதிர்க்கட்சிப் பிரமுகர் விமல் வீரவன்ச.
இதேவேளை, ரணிலுக்கு ஆதரவாக நூற்றுக்கு அதிகமான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையுமில்லையெனவும் தெரிவிக்கும் அவர் முடிந்தால் பட்டியலை வெளியிடும்படி சவால் விடுத்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான சவாலை முறியடிப்பது என ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு ஏகமாக தீர்மானித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment