அ'சேனையில் தேசிய உடல் ஆரோக்கிய, விளையாட்டு வார நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Saturday, 24 March 2018

அ'சேனையில் தேசிய உடல் ஆரோக்கிய, விளையாட்டு வார நிகழ்வு



ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் எண்ணக்கருவான உடல் ஆரோக்கிய, விளையாட்டு வாரம் 2018 என்கிற தேசிய வேலைத்திட்டமொன்றினை விளையாட்டு அமைச்சு நாடுபூராகவுமுள்ள பிரதேச செயலங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதனடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் குறித்த உடல் ஆரோக்கிய, விளையாட்டு வாரம் 2018.03.24ஆந் திகதி (சனிக்கிழமை) சிறப்புற அனுஷ்டிகப்பட்டது. 



அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்பபுடன் குறித்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. 2018.03.24ஆந் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உடல் ஆரோக்கிய, விளையாட்டு நிகழ்வில் பிரதேச செயலக முன்னறில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவணி தேசிய கல்விக்கல்லூரி மைதானத்தை சென்றடைந்தது. பின்னர் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உடற்பயிற்சி நிகழ்விலும் பங்கேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ. ஆதிசயராஜ், தள ஆயர்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எம்.அஸ்லம் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், விளையாட்டு உத்தியோகத்தர் உட்பட அம்பாரை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல். தாஜூதீன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

மேற்படி நிகழ்வின் பின்னர் திணைக்களங்களுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி, கயிறிழுத்தல் நிகழ்வு என்பனவும் இடம்பெற்றமை நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

-றிசாத் ஏ காதர் 

No comments:

Post a Comment