கண்டியில் வன்முறைச் சூழல் சற்று தணிந்துள்ள நிலையில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியில் சமயப் பெரியார்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கல்ஹின்ன ஜும்மா பள்ளிவாசலுக்கு இன்று ஜும்மா தொழுகையின் போது பிரதேசத்தின் பௌத்த துறவிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் விஜயம் செய்திருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த அலவத்தை விஹாரையின் அலவத்தே ஞானரதன தேரர், இனங்களுக்கு மத்தியில் காழ்ப்புணர்வும் பகையும் வளர்வதற்குப் பொய்ப் பிரச்சாரங்களும் பொறாமையும் காரணம் என தெரிவித்திருந்தார்.
பல நூறு வருடங்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம் - சிங்கள மக்களின் ஒற்றுமையை அரசியல்வாதிகளே சீர்குலைப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment