வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ரயீத் ஹுசைன் இலங்கை வந்திருந்த போது ஐ.நா அலுவலகம் முன்பாக சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடைஞ்சல் விளைவித்த காரணத்தின் பின்னணியில் இவ்வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்றைய விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறிய விமல் வீரவன்ச மற்றும் அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோருக்கு எதிராக இப்பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment