எங்களிடம் மனித நேயம் இருக்கிறது: ஹட்டமுன ஆனந்த தேரர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 March 2018

எங்களிடம் மனித நேயம் இருக்கிறது: ஹட்டமுன ஆனந்த தேரர்

தித்தவல்கால பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களுக்கு எந்தவிதமான வன்முறையும் இடம்பெறுவதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. இந்தப் பிரதேசத்தில் மனிதநேயம் இருக்கிறது. எங்களுக்குத் தேவை மனித நேயத் தன்மையாகும்.

இன. மத, குல பேதம் அவசியமில்லை. எங்களுடைய சமய வழிமுறையில் சரியாக நடந்து கொள்ளும் போது எவையும் நடக்கப் போவதில்லை. இந்த நாட்டில் சமாதானத்தையும் மற்றும் சகவாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதியும் மற்றும் எமது பிரதமரும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருகின்றார்கள்  என்று இஹலதொலஸ்பத்துவே பிரிசங்கநாயக ஹிரிபிட்டிய தர்மசந்திர விஹாராதிபதி ஹட்டமுன ஆனந்த தேரர் தெரிவித்தார்.

தொரவேருவ, தம்புவ வதுரஸ்ஸ கட்டுகம்பொல சிங்கள பிரதேச மக்களின் அனுசரணையுடன் தித்தவல்கால சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து  நடத்திய இன ஒற்றுமை தொடர்பாக தித்தவல்கல பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றி இந்த நாட்டில் சமாதானத்தையும் மற்றும் சகவாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதியும் மற்றும் எமது பிரதமரும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருகின்றார்கள்இவ்வாறு இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:

எமது நாட்டில் 30 வருட காலம் யுத்தம் இருந்தது. அதை நிறைவுற்ற பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்து கொண்டும் செல்லும் வேளையில் மீண்டும் சில இடங்களில் வன்முறைகள் தலைதூக்கியுள்ளன. இந்த முரண்பாடுகள் தொடர்பாகப் பார்க்கின்ற போது  எங்களுக்கிடையே இருந்த உறவுகள் இல்லாமைப் போனமைதான் தெளிவாகப் புலப்படுகிறது. இனங்களுக்கிடையே சமயங்களுக்கிடையே சகவாழ்வு இருக்குமாயின் ஒரு போதும் முரண்பாடுகள் ஏற்படப் போவதில்லை.

இதற்கான பல காரணிகள் உள்ளன. எமது நாட்டில் பேசப்படும் மொழியைப் புரிந்து கொள்ளாத தன்மை. தமிழ் மொழி  விளங்கவில்லை என்பது மிக முக்கிய காரணமாகும். சிங்கள மொழி தெரியாமையினால் அதனுடைய தகவல்கள் பரிமாற்றங்கள் சரியாகச் செல்வதில்லை. எல்லா சமூகத்துடன் தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாறி தொடர்ந்து சமூகங்களுக்கிடையிலான  கலந்துரையாடி செல்வோமாயின் அந்த நாடு மோசமான நிலைக்கு பின்தள்ளப்பட மாட்டாது. அதை நாங்கள் கவனதில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டை உலகிவுள்ள பல நாடுகள் அவதானித்துக் கொண்டு இருக்கிறது. சமய ரீதியாலன  முரண்பாட்டைத் தோற்றுவிக்க எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். சிங்கள, முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவர் ஆகிய அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் சமாதானம் சக வாழ்வுடன் எமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

எமது நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்கள் பற்றி நாங்கள் அறிந்து இருக்கின்றோம். சிங்கள , முஸ்லிம், தமிழ் ஆகிய தேசியத் தலைவர்கள் சேர்ந்துதான் இலங்கைக்கான சுதந்திரத்தைப் பெற்றார்கள். அன்று தொட்டு இன்று வரையிலும் எமது நாட்டில் பல்லின சமூகங்களும் ஒன்றிணைந்து வாழ்கின்றன. எனினும் இடையில் சில அடிப்படைவாதிகள் , சில குழுக்கள், சில அமைப்புகள் போன்றவற்றினால்  கலவரத்தை உண்டு பண்ணி எமது நாட்டினுடைய அபிவிருத்திற்கு தடையாக இருக்கின்றனர்.


ஆனாலும் நாங்கள் சந்தோசம் அடைகின்றோம். எங்கள் பிரதேசத்தில் இப்படியான கலவரங்கள் ஏற்படவும் இல்லை. ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதும் இல்லை. கடந்த நாட்களில் இடம்பெற்ற கண்டி திகன, சம்பவத்தின் போது நாங்கள் தித்தவல்கால பள்ளியில் ஒன்று கூடி இந்தப்பிரதேசத்திற்கு கலக்காரர்கள் உள் நுழைவதற்கு இடமளிக்காமல் ஒன்றுமையுடன் செயற்பட்டோம். நாங்கள் உறுதியாகக் கூற முடியும். இந்தப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு வன்முறையாளர்களினால் எந்த விதமான பாதிப்போ தாக்குதலோ, நெருக்கடியோ இடம்பெறாமல் பாதுகாப்பதற்காக  நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்தப் பிரதேசத்தில் மனிதநேயம் இருக்கிறது. எங்களுத் தேவை மனித தன்மையாகும். இன. மத, குல பேதம் அவசியமில்லை. எங்களுடைய சமய வழிமுறையில் நடந்து கொள்ளும் போது எவையும் நடக்கப் போவதில்லை. 

எங்கள் பிரதேச சமயத் தலைவர் மரணம் எய்த போது துக்கத்தை அனுஷ்டிப்பதற்காக தெரு எங்கும் கொடிகள் போட்டு அவரை கௌரவப்படுத்தினார்கள். அது மட்டுமல்ல எங்களோடு ஒன்றிணைந்து செயற்பட்டார்கள.;; இந்தப் பிரதேச முஸ்லிம்கள் எங்களுடைய சகல நிகழ்வுகளில் சேர்ந்து பங்களிப்பை நல்கிவருகின்ற மக்கள் தான். இது நிலையான தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நாட்டில் சமாதானத்தையும் மற்றும் சகவாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதியும் மற்றும் எமது பிரதமரும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருகின்றார்கள் என்று அவர் மேலும தெரிவித்தார்.

சாசன ஆசனத்தின் தலைவர் தம்பகல்ல விஹாராதிபதி , குருநாகல் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் புசல்ல,  குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் முக்கிய பிரதிநிதி அஷ்ஷெய்க் எம். ஜே. இம்ரான், கிறிஸ்தவ சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகளான முஹமட் ரிபாழ், முஹமட் பாஹிம் பல கட்சி அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

-இக்பால் அலி



No comments:

Post a Comment