வன்முறை ஆரம்பமான இடத்தில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. வீடுகளுக்கோ பள்ளிவாசலுக்கோ ஒரு கல்லைக் கூட எவருமே அடிக்கவும் இல்லை.
அந்த ஊரில் எந்தக் கலவரமும் இடம்பெறவில்லை. அவை மட்டுமல்ல ஊருக்கு வெளியே நடந்த இந்தக் கலவரம் பற்றி ஊருக்குத் தெரியாது. எங்கள் இல்லத்திற்கு ஞானசார தேரர் வந்து விட்டுப் போனாரே தவிர இந்தக் கலவரத்திற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை. உயிரிழந்த சிங்கள சகோரனின் குடும்பத்தினர் எங்களிடம் தெரிவித்தார்கள்.
உண்மையான பௌத்தர் என்ற வகையில் அவர்கள் நல்ல முறையில் நடந்து உள்ளனர். எனவே பேரினவாத சக்திகள் அவர்களுடைய வித்தியாசமான வேறு இலாபங்களுக்காக இந்தச் செயற்பாட்டை நடத்தி இருக்கின்றனர். அவர்களுக்கு கட்டாயம் அரசாங்கம் தண்டனை வழங்க வேண்டும். கோட்டை சியம்நிகாய மாநாயக்க தேரர் கலாநிதி இத்தம்பானே தம்மலங்கார தேரர் தெரிவித்தார்.
கோட்டை சியம்நிகாய மாநாயக்க தேரர் கலாநிதி இத்தம்பானே தம்மலங்கார தேரர் குழுவினர் கண்டி மாவட்டத்தில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பகுதிகளுக்குச் சென்று நேரில் சென்று பார்வையிட்டதோடு கண்டி ஜம்மிய்யதுல் உலமா சபையின் கீழ் ஜாவாப் பள்ளியில் இயங்கும் கண்டி நிவாரண அமைப்பின் மையத்தினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
அதே நேரத்தில் இலங்கை ஒரு சட்டம் ஒழுங்கு கொண்டு வரப்பட வேண்டும். அந்த சட்டம் ஒழுங்கில் இனக் கலவரத்தில் ஈடுபட்டு அந்த சொத்துக்களை அழிப்பவர்களை கைது செய்து அவர்களுடைய சொத்துக்களை அரசாங்கம் தேசிய மயமாக்கி அந்த சொத்துக்கள் ஊடாக நஷ்யீடுகள் வழங்கப்பட்டு தண்டனை வழங்கப்பட கூடிய சட்ட மூலம் கொண்டு வரப்பட வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது எதிர்காலத்தில் இன ரீதியான சொத்துக்களை அழிப்பதைத் தடுத்துக் கொள்ளலாம் என்று முக்கியமான கருத்து சொல்லப்பட்டது. எதிர் மே மாதம் முதல் தேசிய சர்வ மத செயற்பாட்டை நாடு பூராகவும் உள்ள ஒவ்வொரு கிராமம் கிராமங்களாகச் சென்று முன்னெடுக்க வேண்டும் என்று தேரர் தெரிவித்தார்.
இந்தக் குழுவினர் காலஞ்சென்ற வாசித் அவர்களுடைய வீட்டுக்கும் சென்று ஆறுதல் வழங்கியதோடு பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளையும் சென்று பார்வையிட்டனர்.
அவர்களிடத்தில் காலஞ்சென்ற வாசித் அவர்களுடை தந்தை கூறும் போது:
என்னுடைய மகனை நான் இழந்து இருக்கின்றேன். அவருடைய ஆயுளை அல்லாஹ் இந்தளவுக்குத் தான் வைத்திருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ் அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை வழங்க வேண்டும். அதேவேளை இன்னுமொரு மகன் காயப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இருக்கின்றார். அவரை வைத்தியசாலையில் ஒரு வித்தியாசமான முறையில் அவரை கவணிக்கின்றனர். அவரை நல்ல முறையில் சிகிச்சையளிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.
நான் என்னுடைய மகளை இழந்தேன், இன்னுமொரு மகன் வைத்தியசாலையில் இருக்கின்றார். என்னுடைய உயிர் போனாலும் பருவாய் இல்லை. எதிர்காலத்தில் இப்படியான சம்பங்கள் வரக் கூடாது . இதை நிறுத்துவதற்கு சகல மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டு முடிவுக் கொண்டு வருதல் வேண்டும். எதிர்காலத்தில் எந்தவொரு இனத்திற்கும் இப்படியான செயல் வரக் கூடாது என்று தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கையினை அவர் விடுத்தார்.
பிரதான சங்க நாயக தேரர் பானகல உபதிஸ்ஸ தேரர், தேசிய சமாதான அமைப்பின் உறுப்பினர் வணக்கத்துக்குரிய பிதா ஜோசப் முன்னாள், சவூதி அரேபியா நாட்டுத் தூவர் ஜாவித் யூசுப், கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் உமர்தீன், செயலாளர் ஏ. எல் அப்துல் கவ்பார், அகில இலங்கை வை. எம். எம். ஏ இயக்கத்தின் பொதுச் செயலாளர் ரிஸ்மி, அஷ்ஷெய்க பசுலுர் ரஹ்மான், பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். சித்தீக் . இர்பான் ஏ. காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment